செங்கல்பட்டில் தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்கள்

செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

Update: 2021-06-30 10:08 GMT

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கொரொனா தடுப்பூசி முகாம் இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தடுப்பூசி மற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் பெரியோர்களும் கல்லூரி வளாகத்தில் குவிந்தனர். இதில் இன்று 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு 200 டோக்கன்களும், 18 வயதுக்கு ஏற்பட்டோருக்கு 70 டோக்கன்களும் மட்டுமே வழங்கப்பட்டது.

மீதமுள்ளவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படவில்லை, இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த ஏராளமான இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே தினந்தோறும் தடுப்பூசி போட வரும் மக்களை ஏமாற்றத்துடன் திருப்பி அனுப்பாமல் மக்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகளை போடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News