உலக புகழ்பெற்ற செங்கல்பட்டு தசரா விழா: எளிய முறையில் நடப்பட்ட பந்தல்கால்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா பெருந்தொற்று காரணமாக செங்கல்பட்டு தசரா திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது

Update: 2021-10-04 04:30 GMT

செங்கல்பட்டில், நவராத்திரியை ஒட்டி நடைபெறும், உலக புகழ்பெற்ற 10 நாள் தசரா விழாவையொட்டி இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்வானது கொரொனா காரணமாக எளிய முறையில் நடைபெற்றது.

வருடம்தோறும் நடைபெற்ற தசரா விழாவையொட்டி, தினமும், ஆதிபராசக்தி அம்மன், கருமாரியம்மன், மீனாட்சியம்மன், பரமேஸ்வரி, சரஸ்வதி அலங்கரிக்கப்பட்டு, அண்ணா சாலை, பஜார், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், வீதியுலா நடைபெறுவது வழக்கம். விழவின் இறுதி நாளான நேற்று, மகிஷாசுரமர்த்தினி அம்மன் எழுந்தருளி, வீதியுலா கோலாகலமாக நடைபெறும். இவ்விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்வார்கள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரொனா பெருந்தொற்று காரணமாக, செங்கல்பட்டு தசரா திருவிழாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஆண்டு மக்கள் கூட்டமின்றி எளிய முறையில் சின்னக்கடைவீதியில் இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

Tags:    

Similar News