வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினால் அபராதம்: போலீசார் எச்சரிக்கை

பத்திரபதிவு அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டும் என போலீசார் எச்சரிக்கை

Update: 2021-07-17 05:15 GMT

பத்திரபதிவு அலுவலகத்திற்கு வரும் வாகனங்களை சாலையோரம் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்பட்டும் என போலீசார் எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட தலைமை பத்திரப்பதிவு பதிவு அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இல்லாத காரணமாக செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு தலைமை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பயனாளிகள் கொண்டு வரும் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் இல்லாததால், சாலை ஓரத்திலேயே நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக செங்கல்பட்டு -காஞ்சிபுரம் செல்லும் முக்கிய சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

மேலும் செங்கல்பட்டு மாவட்ட கிளை கிளை சிறைக்கு கைதிகளைக் கொண்டு வரும் போலீசாரும்  உள்ளே செல்ல அவதிப்படுகின்றனர். எனவே காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுளனர்.

இதனை தொடர்ந்து, இன்று காலை போக்குவரத்து போலீசார் சார்பில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வருபவர்களுக்கு  செங்கல்பட்டு-சென்னை செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வாகனங்களை நிறுத்தும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு தான் வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News