வண்டலூர் சிங்கங்களுக்கு கொரொனா: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆய்வு!

சிங்கங்களுக்கு கொரொனா தொற்று எதிரொலி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திடீர் ஆய்வு

Update: 2021-06-06 11:57 GMT

வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கபட்டு வந்த 11சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கபட்டு அதில் ஒரு பெண் சிங்கம் பலியானது. மேலும் 9 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து சிகிச்சையில் உள்ளது. அதில் கவிதா(19),புவனா(23) ஆகிய இரு சிங்கங்களின் நிலமை மிகுந்த கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் இன்று மதியம் வண்டலூா் உயிரியல் பூங்காவிற்கு திடீரென வருகை புரிந்தாா்.கூட்டுறவு துறை அமைச்சர் அன்பரசன் உடன்வந்தாா். முதலமைச்சா் உயிரியல் பூங்கா வளாகத்தில் உள்ள விருந்தினா் கூடத்தில் சிறிது நேரம் அதிகாரிகளுடன் கலந்து பேசினாா். அதன்பின்பு பேட்டரி வாகனத்தில் ஏறி சென்று சிங்கங்களுக்கு சிகிச்சையளிப்பதை பாா்வையிட்டாா்.

அதோடு மீண்டும் வனத்துறை, உயிரியல் பூங்கா அதிகாரிகள், கால்நடை மற்றும் விலங்கியல் மருத்துவா்களிடம் பேசினாா். அப்போது சிங்கங்களுக்கு எந்தவகையான உணவுகள் அளிக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தாா். அதோடு கொரானாவால் பாதிக்கப்பட்ட சிங்கங்கள் அனைத்தையும் முழு கவனமாக கண்காணித்து மருத்துவ சிகிச்சை அளிக்கவும், மேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் பாாத்துக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதோடு மற்ற விலங்குகளுக்கு நோய் பரவாமல் அனைத்துவிதமான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கும்படி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News