கொரோனாவால் மூடப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறப்பு ;பார்வையாளர்கள் ஏமாற்றம்

சென்னை அருகே வண்டலுார் பூங்காவினுள் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவானது கொரோனா பரவலின் போது மூடப்பட்டது. தற்போது பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டும் போதிய வண்ணத்துப்பூச்சிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

Update: 2022-07-31 06:45 GMT

சென்னை வண்டலுார் பூங்காவின் நுழைவு வாயில். 


 



வண்டலூர் பூங்காவில், கொரோனாவால் மூடப்பட்ட வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று திறக்கப்பட்டது.. அதிகளவில் பட்டாம்பூச்சிகள் இல்லாததால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இருப்பிடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் இரவு விலங்குகள் இருப்பிடம், பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா, பயோ சென்டர், உட்சென்று காணும் பறவைகள் இல்லம் ஆகிய நான்கு பார்வையிடும் இடங்கள் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டன.

இந்த வகையில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் மிகவும் சுற்றுலா பயணிகளை  கவரக்கூடிய இடமான வண்ணத்துப்பூச்சி பூங்கா இன்று முதல் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. காலை முதலே பொது மக்கள் வருகை கணிசமாக அதிகமாக உள்ளது. வருவோர்கள் செல்போனில் படம் பிடித்து மகிழ்கின்றனர்.அதே போல் வார இறுதி நாட்களிலும் சிறுவர் பூங்கா வழக்கமாக மூடப்பட்டிருந்தது தற்போது அதுவும் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பார்வையாளர்களிடம் கேட்ட போது மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வண்ணத்துப்பூச்சிகளை காண வந்தோம் ஆனால் வண்ணத்துப்பூச்சிகள் இல்லை, அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒன்றிரண்டு தான் காணப்பட்டது. இது ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பதாகவும், இருப்பினும் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைவிடம் சிறப்பாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News