கூட்டுறவு சங்கத்தில் யூரியா பற்றாக்குறை சரி செய்யப்படும்:அமைச்சர் அன்பரசன்

Update: 2021-08-20 21:00 GMT

செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை திறந்து வைத்த ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  

கூட்டுறவு சங்கத்தில் யூரியா பற்றாக்குறை உடனடியாக சரி செய்யப்படும் என்றார் அமைச்சர் தா.மோ அன்பரசன்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கூடுதலாக 1000 Lpm கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று துவங்கி வைத்தார் .

பின்னர்,பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: வேளாண் கூட்டுறவு சங்கங்களில் யூரியா பற்றாக்குறை இல்லை. பற்றாக்குறை குறித்த தகவல் வந்தால் அதை சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் மூலம் பூர்த்தி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News