செங்கபட்டில் காள்ள நோட்டு மாற்ற முயன்ற இருவர் கைது; ரூ.4 லட்சம் பறிமுதல்

செங்கபட்டில் டாஸ்மாக் மதுபான கடையில் ரூ.500 காள்ள நோட்டுக்களை மாற்ற முயன்ற தந்தை, மகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-30 11:55 GMT

பைல் படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் தொடர்ந்து சிலர் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக மாவட்ட காவல்துறையினருக்கு தொடர் புகார்கள் வந்தன.

இதனைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் மற்றும் முக்கிய கடைகள், வனிக வளாகங்களில் போலீசார் சந்தேகப்படும்படி ஐநூறு ரூபாய் நோட்டுகளை யாராவது கொண்டுவந்தால் தகவல் கொடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் இருவர் கள்ளநோட்டுக்களை கொடுத்து மதுபானம் வாங்க வந்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற போலீசார் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த தந்தை ராஜி, வயது 56, மகன் கன்னியப்பன் வயது 34 என்பது தெரியவந்தது. இருவரும் செங்கல்பட்டு அருகே உள்ள புலிப்பாக்கம் பகுதியில் உள்ள விஜயா நகரில் ஒரு தனி வீடு எடுத்து கள்ளநோட்டுக்களை அங்கு வைத்து புழக்கத்தில் விட்டுவந்ததாகவும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 800 ஐநூரு ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்து இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News