பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்

பொத்தேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த உயர்ரக கார் தீடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது

Update: 2022-02-09 06:00 GMT

 செங்கல்பட்டு அருகே தீக்கிரையான விலை உயர்ந்த கார்

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி அருகே  தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த BMW  கார் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

சென்னை, இராயப்பேட்டை பகுதியை சார்ந்த திருஞானம் என்பவர் சென்னையில் இருந்து சிங்கபெருமாள்கோவில் கோவிலுக்கு பணியின் காரணமாக தனது BMW காரில் வந்துள்ளார். பொத்தேரி எஸ் ஆர் எம்  பல்கலைக்கழகம் அருகே வந்து கொண்டிருந்த போது, காரின் முன் பகுதியிலிருந்து  புகை வந்ததைத்தொடர்ந்து, காரை ஓரம் கட்டி இறங்கியுள்ளார். காரை விட்டு திருஞானம் இறங்கிய அடுத்த நொடியில் காரின் முன் பகுதியில் மளமளவென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக காரின் உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறையினர் தீயை அணைத்தனர்.இச்சம்பவத்தில் காரின் உரிமையாளர் நொடி பொழுதில் உயிர் தப்பிய  நிலையில், கார் முழுமையாக தீக்கிரையானது.இச்சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News