'காசு வாங்கி ஓட்டு போடாதீங்க' செங்கல்பட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-03-05 06:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி , தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிலையம் அருகே கலெக்டர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். 'வாக்களிப்பது ஜனநாயக கடமை. 18 வயது பூர்த்தியான அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் 'பணத்துக்காகவோ, பொருட்களுக்காகவோ ஓட்டளிக்க வேண்டாம். யாருடைய அச்சுறுத்தலுக்காகவோ, ஆசை வார்த்தைகளுக்காகவோ ஓட்டளிக்க கூடாது. உண்மையான ஜனநாயகம் மலர, ஓட்டளிக்க வேண்டும்' என்றும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News