டிச.23ந் தேதி தாம்பரத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் கருத்து கேட்பு கூட்டம்

டிச.23ந்தேதி தாம்பரத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2021-12-20 12:00 GMT
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் ( பைல் படம்)

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி மற்றும் இதர நகராட்சிகளின் வார்டு மறுவரையறை தொடர்பாக, தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் சார்பில் கருத்துக் கேட்பு கூட்டம் வருகின்ற டிசம்பர் 23.12.2021 வியாழன் அன்று தாம்பரம் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுருந்தது.

தற்போது, நிர்வாக காரணங்களால் மேற்படி கருத்துக் கேட்பு கூட்டம் தாம்பரம், முத்துலிங்கம் தெரு, தாம்பரம் மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் 23.12.2021 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

எனவே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களின் வார்டு மறுவரையறைக்கு உட்படும் குன்றத்தூர் நகராட்சி, மாங்காடு நகராட்சி, தாம்பரம் மாநகராட்சி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, பொன்னேரி நகராட்சி, திருநின்றவூர் நகராட்சி மற்றும் சோளிங்கர் நகராட்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களின் ஆட்சேபனைகள், கருத்துக்களை நேரடியாக தெரிவித்துக் கொள்ளலாம்,

மேலும் இதன் விவரங்களை மனுவாகவும் வழங்கலாம். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் முனைவர் வெ. பழனிகுமார்,  மற்றும் மறுவரையறை ஆணைய உறுப்பினர்/ செயலர் எ. சுந்தரவல்லி, உறுப்பினர் நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா,  சம்பந்தப்பட்ட மாவட்ட மறுவரையறை அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News