செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பட்டயக் கணக்காளர்கள் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தினர் மருத்துவ உபகரணங்களை வழங்கினர்.

Update: 2021-07-17 16:45 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா குமார் மற்றும் பட்டயக் கணக்காளர்கள்

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் ரூ.1.25லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை  வழங்கினார்கள்.

சி.ஏ.அசிஸ்ட் எனப்படும் பட்டயக் கணக்காளர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் ஆகியன மலேசியா கிளையுடன் இணைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

.ஆட்டோ கிளைவ் எனப்படும் மருத்துவ உபகரணங்கள் ரூ.1.25லட்சம் மதிப்பிலானவற்றை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைவர் முத்துக்குமாரிடம் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியாகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

இந்நிகழ்வின் சி.ஏ.அசிஸ்ட் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள்,குழு உறுப்பினர்கள்,பட்டயக் கணக்காளர்கள் பலரும் கலந்து கொண்டனர். இது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீபிரியா குமார் கூறுகையில் 2வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளுடன் இணைந்த படுக்கை வசதி,ஆக்சிஜன் வசதி,கவுன்சிலிங் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய உதவிகளை வழங்கினோம்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களும் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News