செங்கல்பட்டில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு

செங்கல்பட்டில் தனியார் பள்ளி வேன்கள் மற்றும் பேருந்துகளின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-09-30 04:00 GMT

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பின், வரும் நவம்பர் 1-ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு தொழிற்பயிற்சி மைதானத்தில், பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்களை துணை காவல் கண்காணிப்பாளர் ஆதார்ஸ் பச்சேரொ, வருவாய் கோட்டாட்சியர் ஷாகிதா பர்வீன், வட்டார போக்குவரத்து துறை அலுவலர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்று முதல் கட்டமாக இன்று 70க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் வாகனங்கள் மஞ்சள் நிறம், பேருந்து படியின் உயரம், அவசர வழி, தீயணைப்பு கருவிகள், வேக கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட விதிமுறைகளின்படி பள்ளி பேருந்துகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News