மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் அன்னதான திட்டம் துவக்கம்

மறைமலைநகர் 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் தினமும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

Update: 2022-02-21 06:29 GMT

ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில்  தினமும் அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகரில் அனைத்து ஜைனர்களால் வணங்கப்படும் 24 தீர்த்தங்கரர்களில் 21-ஆவது தீர்த்தங்கரராகிய 1008 ஸ்ரீ நமிநாத பகவான் ஜைன ஆலயத்தில் வழிபாட்டிற்கு வருகை புரிவோர் மற்றும் ஏழைகளுக்கு அனுதினமும் அன்னதானம் வழங்கும் திட்டமானது இன்று காலை துவக்கப்பட்டது.

108 ஸ்ரீ விஷ்வேஷ் சாகர் முனி மகராஜின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில், சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் நகர மன்றத் தலைவர் M.G.K.கோபிகண்ணன், முன்னாள் நகர மன்ற துணைத்தலைவர், ஜெ.சண்முகம் ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், மற்றும் பண்டிட் ஜெயபால் ஜெயின் சாஸ்திரி திண்டிவனம் ஜீவேஜேந்திரதாசன் உட்பட சமணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இன்று துவக்கப்பட்ட அன்னதான கூடத்தை ஜெ.சண்முகம் திறந்து வைத்தார். ஆலயத்தின் அறங்காவலர் ராஜசேகர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து..

Tags:    

Similar News