100 நாள் வேலை இல்லாததால் கடும் அவதி: நடவடிக்கை எடுக்ககோரி வலியுறுத்தல்

கீரப்பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை இல்லாததால் ஏழை குடும்பத்தினர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Update: 2022-01-10 04:00 GMT

கீரப்பாக்கம்  பொதுமக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீரப்பாக்கம் ஊராட்சியில் கீரப்பாக்கம், முருகமங்கலம், பெரிய அருங்கால், சின்ன அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் 100 நாள் வேலை பெரிய அருங்கால் மற்றும் சின்ன அருங்கால் கிராமங்களுக்கு மட்டும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கீரப்பாக்கம் மற்றும் முருகமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் 100 நாள் வேலையை நம்பியிருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய குடும்பத்தினர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. எனவே இதுபற்றி மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News