இறந்த கடன்தாரருக்கு தவணைத்தொகை செலுத்தக்கோரிய நிதி நிறுவனத்தைக் கண்டித்து சாலைமறியல்

இறந்த கடன்தாரருக்கும் தவணை தொகை செலுத்த வேண்டும் என கூறிய நிதி நிறுவனத்தைக்கண்டித்து லாரி வேன் உரிமையாளர்கள் சாலை மறியல்

Update: 2022-02-18 08:15 GMT

செங்கல்பட்டு திருக்கழுகுன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வேன் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர்

தவனையில் வாங்கிய வேனுக்கு நபர் இறந்தாலும் தவனையை செலுத்தவேண்டும் என செங்கல்பட்டில் உள்ள தனியார்  நிதி நிறுவனம் நிர்பந்தித்ததைக் கண்டித்து லாரி. மற்றும் வேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் கோகுலபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியன், இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி(27) . இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செங்கல்பட்டு வல்லம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டூரிஸ்ட் வேன் வாங்குவதற்காக உரிய ஆவானங்களை கொடுத்து ரூ,8லட்சத்து 52 ஆயிரம் கடன் தொகை பெற்றுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2021 ஜூன் மாதம் மாரடைப்பு காரணமாக கிருஷ்ணமூர்த்தி இறந்து போனார். அதனை அடுத்து இறப்புச் சான்றிதழுடன் ஆவணங்களை நிதி நிறுவனத்திடம் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த நிதிநிறுவனம் அடுத்த மாதமே இறந்துபோன கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தை மிரட்டி கடன் தொகையை கட்டியாக வேண்டும் என்று கூறியதால் வறுமையில் இருந்த குடும்பம் கடந்த ஆண்டு ஜூலை மாத தவணை தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து காப்பீட்டு தொகை பெறுவதற்காக வங்கி வங்கி மேலாளரை அணுகி (என்ஓசி) என்ற தடையில்லாச் சான்று வேண்டும் என்று கேட்ட போது, உங்களுக்கு என்ஓசி தர வேண்டும் என்றால் ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் செலுத்தினால் மட்டுமே தடையில்லாச் சான்று வழங்கமுடியும் என்று கூறி மிரட்டும் தோனியில் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ் தலைமையில், சிங்கப்பெருமாள் கோவில் சுற்றுலா கார் வேன் ஓட்டுநர் உரிமையாளர் நல சங்கத்தைச் சார்ந்த  50க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு-திருக்கழுக்குன்ரம் சாலையில் உள்ல எச்.டி.பி பைனான்ஸ் நிதி நிறுவனம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.அங்கு வந்த தாலுக்கா, மற்றும் நகர காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரானமாக செங்கல்பட்டு-திருக்கழுக்குன்றம் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News