கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி: அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்

கோவில் அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தி தொழில் துறை அமைச்சர் வழங்கி துவக்கி வைத்தார்

Update: 2021-06-17 06:23 GMT

கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவி திட்டத்தை  அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவக்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தமிழகத்திலுள்ள 14000 கோவில் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு தமிழக அரசு 4000 ரூபாய் உதவித் தொகையும் 10 கிலோ அரிசி மற்றும் 15 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். 

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 231 பயனாளிகளுக்கு 4000 ரூபாய் உதவித் தொகையும் 10 கிலோ அரிசி உட்பட 15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா .மோ.அன்பரசன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஷாகிதா பர்வின், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பிரியா மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News