செங்கல்பட்டில் மதுபான ஆலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் பொதுமக்கள்அவதி

செங்கல்பட்டில் மதுபான ஆலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-17 13:15 GMT

மதுபான தொழிற்சாலையின் கழிவு ஏரியில் கலப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு அடுத்த வேதநாராயணபுரம், இருங்குன்றப்பள்ளி, ஒழலூர் பழவேலி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இந்த நிலையில் பாலாற்றங்கரையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி கடந்த 40 ஆண்டுகாளாக இயங்கிவரும் தனியார் மதுபானங்களுக்கு மூலக்கூறு தயார் செய்யும் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவின் துர்நாற்றத்தால் ஊருக்குள் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு, வயிற்றுபோக்கு உள்ளிட்ட பிரச்சனைகள ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இக்கிராமத்தில் மதுபான ஆலையிலிருந்து வெளிவரும் துர்நாற்றத்தினால் உணவு குடிநீர் கூட மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு 8 கிராம மக்கள் பலகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டு இந்த மதுபான ஆலையை தற்காலிகமாக மூடினர்.

இதன் காரணமாக மதுபான ஆலையை சுற்றியுள்ள மக்கள் நிம்மதியடைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மதுபான ஆலை மறு சீரமைக்கப்படு செயல்பட துவங்கியுள்ளது.

இம்மதுபான ஆலையிலிருந்து வேளியேறும் நச்சு கலந்த கழிவு நீர் அருகில் உள்ள இருங்குன்றப்பள்ளி ஏரியில் கலக்கப்படுவதால் சுமார் 8 கிராம மக்களுக்கு மீண்டும் சுவாச கோளாறுகளும், உடல் உபாதைகளும் ஏற்பட்டு கூடும்.

அவதிக்குள்ளாகி வருவதாகவும், நச்சு கலந்த கழிவு நீர் நிலத்தடி நீரில் கலந்து குடிக்க நீரின்றி அலைவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

பொதுமக்களுக்கு குடிக்க நீர் இல்லாத நிலையில் பாலாற்றிலிருந்து தனியார் மதுபான ஆலைக்கு ஆழ்துளை கிணறுகள் அமைத்து பல லட்சம் லிட்டர் நீரை உறுஞ்சுகின்றனர்.

மேலும் துர்நாற்றம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கும் கடும் பாதிப்பை உண்டாக்குவதாக வாகன ஓட்டிகளும் தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்களுக்கு இடையூராக இயங்கிவரும் இந்த தனியார் மதுபான ஆலையை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News