ரெம்டெசிவிா்மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக மருத்துவர் கைது

செங்கல்பட்டு அருகே தனியாா் மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டா் ரெம்டிசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக கைது

Update: 2021-05-13 14:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே தனியாா் மருத்துவ கல்லூரியில் டாக்டராக உள்ள முகமது இக்பால் என்பவா் ரெம்டெசிவிா் மருந்தை அதிக விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட சிவில் சப்ளை சிஐடி போலீசாா் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனா். அப்போது  செங்கல்பட்டு மாவட்டம் OMR சாலை அருகே உள்ள தாழம்பூரில் உள்ள அவருடைய வீடு அருகே விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

இன்று காலை சிவில் சப்ளை சிஐடி போலீசாா்,சாதாரண ஆட்கள் போல் நடித்து,செல்போன் மூலம் டாக்டரை தொடா்பு கொண்டு மருந்து கேட்டனா். அப்போது முகமது இக்பால்,ஒரு டோஸ் மருந்து ரூ.22 ஆயிரம். உங்களுக்கு 6 டோஸ் மருந்து வேண்டுமானால் ரூ.ஒரு லட்சத்து 32 ஆயிரம் பணம் தர வேண்டும் என்றாா். பணத்துடன் தாழம்பூருக்கு வரும்படி கூறினாா்.

இதையடுத்து சிவில் சப்ளை சிஐடி போலீசாா், அவா் வரச்சொன்ன இடத்திற்கு மருந்து வாங்குவது போல் சென்றனா். அங்கு மருந்துடன் வந்த டாக்டா் முகமது இக்பாலை கைது செய்தனா். அதோடு அவரிடமிருந்த 6 டோஸ் மருந்து பாட்டில்களையும் கைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News