செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு முன் பொங்கலிட்டு வழிபாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வீட்டின் முன்பு ஏராளமான மக்கள் பொங்கலிட்டனர்

Update: 2022-01-14 09:08 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டு முன் பொங்கலிட்டு வழிபட்டனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விளைநிலங்களில் விளைந்த காய்கறிகளை சூரியபகவானுக்கு படைத்து வீட்டின் முன்பு வண்ண வண்ண கோலமிட்டு பொங்கலிடுவது வழக்கம்.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு நகரம், மதுராந்தகம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், பல்லாவரம், தாம்பரம், செய்யூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்று காலை முதலே புத்தாடை அணிந்து வீட்டின் முன் வண்ண வண்ண கோலமிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டனர்.‌ பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் அவர்களது வீட்டிலேயே சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News