ஊரடங்கு விதியை மீறிய வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டில் ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றிய 350 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-16 07:00 GMT

கொரோனா பரவலை தடுக்க, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இன்று காலைமுதல் வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி செங்கல்பட்டு நகர பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசார் 455 வழக்குகள் பதிவு செய்தனர்.

அதில் தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களின் 350 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே போல், சமூக இடைவெளி பின்பற்றாதது தொடர்பாக 36 வழக்குகளும், விதிகளை மீறி கடைகள் திறந்து வைத்திருந்தது தொடர்பாக 22 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

Tags:    

Similar News