இ பாஸ் இல்லாத வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டு சுங்கச்சாவடி மற்றும் காஞ்சிபுரம் சாலையில் இ-பாஸ் இல்லாத இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்

Update: 2021-05-19 05:24 GMT

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருவதால் சென்னையில் இருந்து பொதுமக்கள் வேறுவழியின்றி தென்மாவட்டங்களில் உள்ள தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் எதுவும் இல்லாமல் செங்கல்பட்டு நோக்கி வரும் இருசக்கர வாகனங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு இ பாஸ் உள்ள வாகனங்களை மட்டும் அனுமதிக்கின்றனர்.

இதனிடையே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல இ-பாஸ்க்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்தாலும், தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் என்ன செய்வதென்று தெரியவில்லை எனவும் சென்னைவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சென்னையில் நாளுக்கு நாள் நோய்தொற்று அதிகரித்து வந்த வண்ணம் இருக்கும் காரணத்தினால் இருசக்கர வாகனத்தில் வேறுவழியின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தங்கள் நிலையை தெரிவிக்கின்றனர். ஆனால், குடும்பத்துடன் இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் வரும்பொழுது செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து 20 நாட்களுக்கு பிறகு இருசக்கர வாகனம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News