செங்கல்பட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல்

செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-14 07:00 GMT

மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.3000 ஆகவும், தீவிர பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5000 ஆகவும் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் மறியில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் தாட்சாயிணி தலைமை வகித்தார். மாற்றுதிறனாளிகள் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தைக் கைவிட வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோரை, போலீஸார் கைது செய்து, செங்கல்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags:    

Similar News