ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்றதும் கஞ்சா வழக்கில் கைது

நெடுங்குன்றம் ஊராட்சி வார்டு உறுப்பினராக பதவியேற்ற பிரபல ரவுடி சூரியாவின் மனைவி பதவியேற்பு முடிந்ததும் கஞ்சா வழக்கில் கைது

Update: 2021-10-21 04:00 GMT

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்தில் அடங்கியது நெடுங்குன்றம் ஊராட்சி.இந்த ஊராட்சியின் 9 வது வாா்டில் விஜயலட்சுமி (32) என்ற பெண் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.இவர் பிரபல ரவுடி சூர்யாவின் மனைவி. சூா்யா மீது பீர்க்கன்காரணை, வண்டலூா் ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி,வெடிகுண்டு தயாரித்தல் உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.சூரியா தற்போது சிறையில் உள்ளாா்.

இந்நிலையில் நேற்று உள்ளாட்சி தோ்தல்களில் வெற்றிப்பெற்ற ஊராட்சி தலைவா்கள்,உறுப்பினா்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்று கொண்டனா்.அதைப்போல் நெடுங்குன்றம் ஊராட்சி மன்றத்தில் நடந்த விழாவில் விஜயலட்சுமி கலந்து கொண்டு பதவிப்பிரமாணம் செய்து பொறுப்பேற்று கொண்டாா்.

அதன்பின்பு அவா் மேடையிலிருந்து கீழே இறங்கியதும், அங்கு தயாராக நின்ற வண்டலூா் ஓட்டேரி போலீசாா், விஜயலட்சுமியை கஞ்சா விற்பனை செய்ததாக வந்த புகாரின் பேரில் கைது செய்தனா். அவா் போலீசாருடன் செல்ல மறுத்ததால், பெண் போலீசாா்,விஜயலட்சுமியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றி வண்டலூா் ஓட்டேரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனா்.

விஜயலட்சுமியின் ஆதரவாளா்கள், சூா்யா மீது உள்ள காழ்ப்புணா்ச்சியாலும், சூரியா பாஜகவில் சோ்ந்துள்ளதாலும்,அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக ஆளும் கட்சி போலீஸ் மூலம் இந்த கைது சம்பவத்தை நடத்தியுள்ளனா் என்று கூறுகின்றனா்.

ஊராட்சி தோ்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினா், பதவிப்பிரமானம் செய்து விட்டு மேடையை விட்டு கீழே இறங்கும்போது, போலீசால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News