செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள்

புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சார்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது

Update: 2021-05-21 10:27 GMT

புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டி வழங்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் படுக்க இடமின்றி, ஆக்சிஜன் பற்றாக்குறையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது

இதனை குறைக்கும் வகையில், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை இந்தியா முழுமைக்கும் முதல் கட்டமாக 200 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மலேசியாவில் இருந்து அனுப்பியுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

அதோடு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பாதுகாப்பு உடைகள், முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க் போன்றவையும் வழங்கப்பட்டது. இதனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் கொரோனா நோய் பிரிவின் பொறுப்பாளர் டாக்டர் பத்மநாபன் அவர்களிடம், புத்தர் ஒளி பன்னாட்டுப் பேரவை தமிழ் நாட்டின் தலைவர் டாக்டர் கீதாகுமாரி என்கிற மல்லை தமிழச்சி வழங்கினார்.

Tags:    

Similar News