சேகரிக்க தனி இடம் இல்லை..! குப்பைக்காடாக மாறும் செங்கல்பட்டு நகராட்சி!!

செங்கல்பட்டு நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க தனி இடம் இல்லாததால், சாலைகள், வீடுகளின் அருகே குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் நகராட்சியே குப்பை காடாக மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-08 05:30 GMT

செங்கல்பட்டு நகராட்சி சாலையில் குவிந்துகிடக்கும் குப்பை.

செங்கல்பட்டு நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். செங்கல்பட்டு நகராட்சியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் நுண்ணுயிர் உரக்கிடக்கு உள்ளது.

கடந்த ஆண்டு வரை செயல்பட்டு வந்த இது தற்போது செயல்பாட்டில் இல்லை.  எனவே ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளிட்ட குப்பை கிடங்குள் செயல்பட்டால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காண இயலும்.

பொதுமக்கள் வீடுகளில் தேங்கியிருக்கும் குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் யாரும் வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லாததால் அருகே உள்ள காலி இடங்களில்  கொட்டி வருகின்றனர். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் நாள் கணக்கில் வாரப்படாமல் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் தேங்கி சிதறி கிடக்கின்றது.

இந்த குப்பைக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு ஆய்வாளரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை.

குப்பைகள் அள்ளப்படாததால் சமூக விரோதிகள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இந்த தீ மளமளவென பரவி கரும்புகையுடன் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுத்தி வருகிறது.

இந்த குப்பை கழிவுகளை நகராட்சி நிர்வாகம் அள்ளாமல் தெருவிலேயே சிதறிக்கிடப்பதால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கால்நடைகளும் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்ற காரணத்தால் செறிமான கோளாறு ஏற்பட்டு உயிரிழக்கின்றன.

மேலும் நகரப் பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் செங்கல்பட்டு நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் தெருக்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அள்ள நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மூடப்பட் உரக்கிடங்கையும், குப்பை சேகர பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#NoSeparate #place #savage #Chengalpattu #municipality #turned #garbage #dump

#சேரிக்க #தனிஇடம் #இல்லை #குப்பைக்காடாகமாறும் #செங்கல்பட்டு #நகராட்சி #tamilnadu #chengalpattu 

Tags:    

Similar News