தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ஆய்வறிக்கை தயார் செய்யும் பணி தீவிரம்

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Update: 2021-07-09 12:00 GMT

செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை குறைக்க தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் என்னென்ன செய்வது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு ,மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் வாகனங்காள் செல்வதன் காரணமாக தற்போது சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் எந்நெந்த பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது, மக்கள் அதிக அளவில் சாலையை கடக்கும் பகுதிகள், சிக்னல் எங்கெங்கு பொருத்தவேண்டும் என்றவற்றை ஆய்வறிக்கையாக சமர்பிக்க மாவட்ட ஆட்சியரகம் சார்பில் வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று, வட்டார போக்குவரத்துத்துறை, காவல்துறை, மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் பகுதி வரை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மக்கள் அதிக அளவில் சாலையை கடக்கக்கூடிய மஹேந்திராசிட்டி தொழிற்பூங்கா சாலை, சிங்கப்பெருமாள்கோயில், மறைமலை நகர் தொழிற்பேட்டை, கூடுவாஞ்சேரி, வண்டலூர் ஆகிய பகுதிகளில் சிக்னல் அமைப்பது, சாலை தடுப்புகள் அமைப்பது உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

Similar News