வண்டலூர் பூங்காவில் இன்று முதல் மீனகம்(Aquarium) திறப்பு: திரண்ட பார்வையாளர்கள்

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் திறக்கப்பட்ட மீனகம்(Aquarium) கண்டு களிக்க திரண்ட பார்வையாளர்கள்

Update: 2022-09-10 06:15 GMT

பைல் படம்

வண்டலூர் பூங்காவில் இன்று முதல் மீனகம்(Aquarium) திறப்பு. 28 வகையான வகை வகையான மீன்களை பார்க்க பார்வையாளர்கள் ஆர்வத்துடன் திரண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கொரோனாவிற்கு பிறகு திறக்கப்பட்ட போதும், பல்வேறு உயிரினங்கள் வாழ்விடம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.படிப்படியாக அவைகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீனகம் Aquarium பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. இதன் வடிவமைப்பு ஒரு பெரிய மீன் போன்ற வடிவிலானது பார்த்ததும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

இந்த மீனகத்தில் ஆப்பிரிகன் மீன், ஏஞ்சல் மீன், பிளாக் கோஸ்ட், டிஸ்கஸ் மீன், பிரானா ரெட் பகு, டைகர் பர்ப், உள்ளிட்ட 28 வகையான மீன்கள் உள்ளது.இன்று முதல் இவை பார்வையாளர்கள் கண்டு களிக்க திறக்கப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்கின்றனர். 

Tags:    

Similar News