கனிம வள கடத்தல் வழக்கு: தவிர்க்கக்கோரி மணல் லாரி உரிமையாளர் ஆர்ப்பாட்டம்

கனிம வள கடத்தல் சட்டத்தில் வழக்கு பதிவதை தவிர்க்கக்கோரி, செங்கல்பட்டில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-12-24 04:15 GMT

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர்.

தமிழ்நாடு மணல் மற்றும் எம்சாண்ட் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் சார்பாக, கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பில் தலைவர் யுவராஜ் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில் எம் சாண்ட், ஜல்லி, ஏற்றி வரும் லாரிகள் மீது,  கனிமவள கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. லாரிகளில் அதிக பாரம் ஏற்ற வலியுறுத்தும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரிகளில் இருந்து வாங்கும் உற்பத்தி தேவையான அனுமதி சீட்டு வைத்து, ஜல்லி எம்சாண்ட் போன்றவற்றில் மதிப்புக்கூட்டு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும். லாரியில் அதிக பாரம் ஏற்றுவதால் விபத்து அதிகம் நடக்கிறது என்ற குற்றச்சாட்டை அடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் அதிக பாரம் ஏற்றுவதை தவிர்த்து வருகிறோம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில்,   தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஜெயராமன், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நாராயணன்,  காஞ்சிபுரம் தீனன் செல்வகுமார் உள்ளிட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News