செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், இன்று வரை 694 பேர் மனுதாக்கல்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இன்று வரை 694 பேர் பல்வேறு பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-09-16 15:30 GMT
கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு ( பைல் படம்)

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் இரண்டாவது நாளாக போட்டியிட பல்வேறு ஒன்றியங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.

ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்காக நேற்றுவரை ஒன்றியங்களில் 6 மனுக்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர்.கிராம ஊராட்சி தலைவர் பதவிக்காக 133 வேட்புமனுக்கள் இன்று 8 ஒன்றியங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி வார்டுகளில் இன்று 558 நபர்கள் தங்கள் வேட்பு மனுவை கிராம ஊராட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்துள்ளனர்.

மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு இதுவரை 8 ஒன்றியங்களில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 663 வேட்பு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. நேற்று 31 வேட்பு மனுக்கள் என இன்று வரை மொத்தம் 694 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News