தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்து மின்சாரம் துண்டிப்பு : சமூகஆர்வலர் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்ததால் மின் கம்பம் சரிந்து மின்சாரம் துண்டித்து மக்கள் அவதிப்படுகின்றனர் என சமூக ஆர்வலர் றினார்.

Update: 2022-06-22 06:55 GMT

தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்து மின் கம்பம் சரிந்து அப்பகுதி வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 34 ஜட்ஜ் காலனி பகுதியில் தனியார் ராட்சத லாரி ஒன்று கட்டிட பணிக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிவந்தது. இந்நிலையில் மின்கம்பம் ஒன்றின் மீது மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, நீண்டநேரம் மின் தடையால் இரவில் மக்கள் தூக்கம் இழந்தனர். இதனால், ஜட்ஜ் காலையில் அமைக்கபட்டுள்ள உயர்தேக்க குடிநீர் வினியோக தொட்டியில் தண்ணீரை ராட்சத மின் மோட்டார் மூலம் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதியை கருத்தில் கொண்டு மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களின் இணைப்பு மையத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான லயன் முனைவர்.கோவிந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சமையல் செய்யவும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் மின்வாரிய அதிகாரிகளின்  அலட்சியத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் துரிதமாக தீர்வு காண வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்களின் இணைப்பு மையத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான லயன் முனைவர்.கோவிந்தராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News