இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் போலீசார் தீவிர கண்காணிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா விதிமீறல்கள் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2021-05-10 04:15 GMT

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இன்றுமுதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இச்சூழலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி மளிகை கடை, பலசரக்கு கடை மற்றும் காய்கறி கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் எதுவும் இயங்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளும் மதியம், 12.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். ஓட்டல்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தன. செங்கல்பட்டில் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களை அவர்களுக்கு கொரொனா விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

இதுகுறித்துப் செங்கல்பட்டு நகர காவல்நிலைய ஆய்வாளர் விநாயகம் கூறுகையில், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தால், அபராதத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் 'டாஸ்க் போர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது' ஆகவே அனைவரும் ஒன்றினைந்து கொரொனாவை ஒழிக்க பாடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News