தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன் "குமிழி" நந்தினி சரவணன் உறுதி

தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்ற பாடுபடுவேன் என்று குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணன் தெரிவித்தார்.

Update: 2021-09-21 04:45 GMT

குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 9ந் தேதி நடைபெறுகிறது.

நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குமிழி ஊராட்சியானது, பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சியாகும். இந்த ஊராட்சியின் தலைவர் பதவிக்கு நந்தினிசரவணன் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

நந்தினியின் கணவர் சரவணன், இந்த குமிழி ஊராட்சிக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை  போராடி பெற்றுத்தந்துள்ளார். அவர் மக்கள் பிரச்சனைக்காக அயராது பாடுபடுபவர். என்பது இந்த ஊராட்சி மக்களுக்கு நன்கு தெரியும்.

இப்படிப்பட்ட சூழலில் பொதுமக்களோடு பொதுமக்காளாக நின்று போராடி அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துவரும் சரவணன், தற்போது தனது மனைவி நந்தினியை தலைவர்  பதவிக்கு போட்டியிட வைக்கிறார். இது குறித்து நந்தினி சரவணன் கூறியதாவது.  வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் அரசுடன் இணைந்து செயல்படுவேன்,  குமிழி ஊராட்சியை அனைத்துவசதிகாளும் நிரம்பிய தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவதே எனது லட்சியம் என தெரிவித்தார். மேலும் ஊராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்த சாலைகளை புதிய சாலைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

24 மணி நேரமும் அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான குடிநீர் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன், இளைஞர்களுக்கு தேவையான பகுதிகளில் உடற்பயிற்ச்சி கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், அமைத்துத்தர நடவடிக்கைகள் மேற்கொள்வேன், ஊராட்சியின் அனைது பகுதிகளிலும் சாக்கடை வசதி செய்து தந்து ஊராட்சியின் சுகாதாரத்தை காப்பேன், சமுதாயக் கூடம் கட்டுவேன்   இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Tags:    

Similar News