கலெக்டர் தந்த நம்பிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பழங்குடியின மக்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் தந்த நம்பிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை பழங்குடியினர் செலுத்திக் கொண்டனர்.

Update: 2021-07-23 08:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் பழங்குடியின மக்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தி, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வைத்தார் கலெக்டர் ராகுல்நாத்.

கொரோனா முதல் அலையின்போது பழங்குடியின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், 2-வது அலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் பழங்குடியின மக்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பழவேலி, மதுராந்தகம் கன்னிகோயில், செய்யூர், பொன்விளைந்த களத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது. ஆனால் தடுப்பூசி குறித்த அச்சத்தால் அவர்கள் அதனை செலுத்துவதில் தயக்கம் காட்டி வந்தனர்.

செங்கபட்டில் உள்ள பழவேலி, அஞ்சூர் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறையினர் சென்ற போது அவர்கள் தடுப்பூசி செலுத்த பயந்தனர்.

கொரோனா முதல் அலையின்போது பழங்குடியின மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில், 2-வது அலையில் பழங்குடியின மக்கள் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் தொகை ரீதியாக குறைவாக உள்ள அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினருடன் நேரடியாக பழவேலி கிராமத்திற்கு சென்றார்.

அங்கு தடுப்பூசி முகாமை நடத்தி அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அந்த மக்கள் தடுப்பூசி போட முன்வந்தனர். உடனடியாக அங்கு வசிக்க கூடிய மக்களுக்கு முதல்கட்டமாக 50 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Tags:    

Similar News