செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2022-01-06 13:58 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் தற்போது  ஒமிக்ரான் மற்றும் உருமாறிய கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக மொத்தம் 439 வார்டுகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒமிக்ரான் தொற்று சிகிச்சைக்கு 32 படுக்கையுடன் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டும் ஆக்ஸிஜன் இல்லாத தேவைப்படும் பட்சத்தில் ஆக்ஸிஜன் பொருத்தக்கூடிய நிலையில் 32 படுக்கை வசதியுடன் ஒரு கொரோனா வார்டும் குழந்தைகளுக்கான 100 படுக்கையுடன் கூடிய சிறப்பு கொரோனா வார்டும் தயார் நிலையில் உள்ளதாகவும் அப்போது கூறினார்.

மேலும்  செங்கல்பட்டு மருத்துவமனைக்கு இதுவரை ஒமிக்ரான் தொற்றுடன் ஒரு நபர்கூட வரவில்லை. இன்று ஒரேநாளில் உருமாறிய கொரோனா தொற்று 28 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மருத்துவமனையில் போதுமான படுக்கைவசதி மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு பற்றியும் கூறினார். அதனை தொடர்ந்து கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு கொரோனா அறிகுறி குறித்து பிரிசோதனை செய்யும் வார்டு ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News