போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி

போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்த முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Update: 2021-09-19 14:00 GMT

சென்னையை சேர்ந்த ஜெயின்லால் சவுத்ரி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் திருப்போரூர் அடுத்த பையூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறி சில முக்கிய ஆவணங்களை கொடுத்து முதல்கட்டமாக 6 கோடி ரூபாய் வாங்கியுள்ளார்.

பின்னர் மேலும் தொழில் செய்ய பணம் தேவைப்படுவதாக கூறி, நான்கு லட்சத்தை பெற்றுள்ளார். பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பணத்தை வாங்கவில்லை என கூறி ஜெயின்லால் சவுத்ரியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பைனான்சியர் ஜெயின்லால் சவுத்ரி சார்பில் ஆவணங்களை சரி பார்த்தபோது, அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதனை அடுத்து ஜெயின் லால் சவுத்ரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இன்று மாலை புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News