வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம் திடீர் உயிரிழப்பு..!

Dead Lion- வண்டலூர் உயிரியல் பூங்காவில் 25 வயது பெண் சிங்கம் உயிரிழந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Update: 2022-07-05 05:30 GMT

தெற்கு ஆசியாவிலேயே பெரிய பூங்காவான, வண்டலூர் உயிரியல் பூங்கா.

Dead Lion- தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரிய உயிரியல் பூங்காவில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும் ஒன்று. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வந்து செல்வதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஆண் சிங்கம் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டில் கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கம் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த ஆண் சிங்கம் உயிரிழந்தது விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த கொரோனா கால கட்டமான 2021 மே மாதத்தில் வைரஸ் தொற்று காரணமாக நிலா என்னும் பெயர் சூட்டப்பட்ட பெண் சிங்கம் மரணமடைந்தது.

தொடர்ந்து, வண்டலூர் பூங்காவில் சிங்கங்கள் உயிரிழப்பது அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. இந்த சூழலில், தற்போது புவனா என்கிற விஜி என்ற 25 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்களை அதிகரிக்க சிம்பன்சி குட்டிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை பூங்கா அதிகாரிகள் கொண்டாடினர். ஆனாலும், குறிப்பாக சிங்கங்கள் உயிரிழப்பு தொடர்கதையாக இருப்பது வேதனைக்குரியது; இதுதொடர்பாக அரசு முறைப்டி விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் இதுபோல நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்கின்றனர், விலங்குகள் நல ஆர்வலர்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News