மதுராந்தகம் அருகே புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுராந்தகம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1400 மதுபாட்டில்கள் பறிமுதல்

Update: 2022-02-09 05:15 GMT

பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 1400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம்பேட்டை கூட்டுசாலையில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் துரை காவல்துறை உதவிஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் ஆனந்தன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது.

அப்போது உத்திரமேரூரிலிருந்து மதுராந்தகம் மார்க்கமாக வேடந்தாங்கல் சாலையில் வந்த மாருதி காரை  சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தியபோது,  வாகனத்தை நிறுத்தாமல் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்று தப்பிக்க முயன்றனர்.

அப்போது பறக்கும் படையினர் பின்தொடர்ந்து துரத்தி சென்றபொது, காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு காரில் இருந்த ஓட்டுனர் மற்றும் கடத்தல்காரர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

காரில் திறந்து பார்க்கும் பொழுது புதுச்சேரியில் மாநிலத்தை சேர்ந்த 1400 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் 1.5 லட்சம் ஆகும்.  பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Tags:    

Similar News