குமிழி ஊராட்சியை பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் - நந்தினி சரவணன்

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Update: 2021-09-26 03:30 GMT

குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றித்துக்குட்பட்ட குமிழி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு மூக்குக்கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும் நந்தினி சரவணன், குமிழி ஊராட்சியை  பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் என அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால் பிரசாரத்தை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன. இதனால் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நந்தினி சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- குமிழி ஊராட்சியை, பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன். குமிழி ஊராட்சியில் பல வருடங்களாக பொதுமக்கள் வசித்துவந்த வீடுகளை தரைமட்டமாக்கியவர்காளுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் மீண்டும் அப்பகுதி மக்களுக்கு வீடுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதுநாள்வரை தனியார் நிறுவனத்தின் வாசல் வழியாக சுடுகாட்டிற்கு செல்வதை தவிர்த்து புதிய பாதை அமைத்துத்தரப்படும். பசுமையாக இருந்த ஏரியை சீரழித்தவர்கள்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் சலவை நிறுவனத்தால் பல ஏக்கர் விவசாயமும், நிலத்தடி நீர் பாதிப்பும் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த தனியார் சலவை நிறுவனத்தை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சாலைகள் சீரமைத்து தரப்படும், சாலையோரங்களில் கால்வாய்கள் அமைக்கப்படும். ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை மறு சீரமைத்து பொதுமக்கள் மயண்பாட்டிற்கு கொண்டுவரப்படும். குமிழி கிராமத்தில் மருத்துவமனையாக கிராம நிர்வாக அலுவலகம் மாறியதால் பொதுமக்கள் கிராம நிர்வாகி அதிகாரியை தொடர்புகொள்ள பல கிலோமீட்டர் தூரம் செல்லும் அவல நிலையை மாற்றியமைக்கப்படும். என வாக்கு சேகரிப்பின்போது நந்தினி சரவணன் வாக்குறுதியளித்தார்.

படக்குறிப்பு: குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிகளில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் "நந்தினி சரவணன்" தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News