செங்கல்பட்டில் ஆக்சிஜன் படுக்கை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து தரவேண்டும் என்று கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-05-06 03:15 GMT

செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

நேற்று நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 13 நபர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றின் தன்மைக்கு ஏற்ப தேவையான மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ ஊழியர்களே போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய வாலிபர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

இதில் நோயாளிகளுக்கும் உதவியாக ஆப்சட் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News