கூடுவாஞ்சேரியில் கொரோனா ஊரடங்கை காற்றில் பறக்கவிட்ட இறைச்சிக்கடை

கூடுவாஞ்சேரியில், ஊரடங்கு விதிகளுக்கு மாறாக செயல்பட்ட மாட்டிறைச்சி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2022-01-23 08:15 GMT

கூடுவாஞ்சேரியில் விதிமீறி செயல்பட்ட இறைச்சிக்கடை.

கொரோனா பரவலை தடுக்க,  தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இன்று ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையை இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இறைச்சிகடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் அதிகாலை மாட்டிறைச்சி கடை திறக்கப்பட்டு வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான மக்கள் மற்றும் தனியார் உணவக சேவையாளர்கள் காலை முதலே, அந்த இறைச்சிகடையில் கூட்டமாக நின்று இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். இதனை வீடியோவாக படம் பிடித்த சிலர் சமூக வளைதலங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

கொரொனாவை கட்டுபடுத்த விதித்த விதிமுறை மக்கள் நலனுக்கு என்றாலும், அதிகாரிகளும் வியாபாரிகளும், பொதுமக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. அதேபோல், விதிமீறுவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. 

Tags:    

Similar News