கொரோனா நிவாரண நிதி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-05-15 05:50 GMT

கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை திட்டத்தை செங்கல்பட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

கொரோனா நிவாரண தொகையாக ரூபாய் 4 ஆயிரம் திமுக ஆட்சி அமைந்தவுடன் வழங்கப்படும் என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான தேர்தல் சமயத்தில் அறிவித்திருந்தனர்.

முதற்கட்டமாக தமிழக முழுவதும் ரூ.2 ஆயிரம் நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அன்மையில் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார். நியாய விலை கடை ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.2 ஆயிரம் வழங்க உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட பயனாளிகளுக்கு மணிகூண்டு அருகே உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர்  தா.மோ அன்பரசன் ரூ.2 ஆயிரம் வழங்கி துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், கூட்டுறவு துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News