செங்கல்பட்டு: 2 இன்ஸ்பெக்டர் உட்பட 29 போலீசாருக்கு கொரொனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 29 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-18 14:45 GMT

கோப்பு படம் 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரொனா பெருந்தொற்றின் தாக்கம் சதம் அடிக்கத் துவங்கி உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரொனா தொற்று 2500ஐ கடந்து,  அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு, மற்றும் இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட சுமார் ஐநூறுக்கு. மேற்பட்ட காவல்துறையினருக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேல்மருவத்தூர், மாமல்லபுரம், செங்கல்பட்டு ஆகிய காவல்நிலையங்களில் பணியாற்றிவரும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் உட்பட 29 காவலர்களுக்கு கொரொனா பெருந்தொற்று உறுதியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து கொரொனாவால் பாகிக்கப்பட்ட காவலர்கள், அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களையும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் காவலர்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது காவல்துறையினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News