செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

செங்கல்பட்டில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-05 06:15 GMT

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

செங்கலபட்டு மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஆ. ராகுல்நாத், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு செவிலியர் பயிற்சி கல்லூரி மாணவிகள் கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

"கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் என்பதனை நான் அறிவேன். அதனை தவிர்க்க, பொது இடங்களுக்குச் செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிவேன். மற்றவர்களிடமிருந்து குறைந்த பட்சம் 6 அடி இடைவெளியை கடைப்பிடிப்பேன். சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்வேன். நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு மற்றவர்களையும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துவேன்.

இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவுவதை தடுக்க நான் அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைப்பிடிப்பேன். மற்றவர்களையும் கொரோனாவிற்கு பொருத்தமான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்துவேன். கொரோனா மூன்றாம் அலையினை தடுக்க எப்பொழுதும் விழிப்புடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்" என மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பேருந்துகளிலும், வியாபாரிகள் ஆகியோரிடம் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சிகளில்,செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி சுகாதாரப் பணியாளர்கள் செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி உட்பட நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News