டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சி.ஐ.டி.யுவினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் சி.ஐ.டி.யுவினர் ஆர்பாட்டம்

Update: 2021-06-26 11:43 GMT

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ள நிலையில், இவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மருந்து தொழிற்சாலையை உடனடியாக திறக்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தியும் சி.ஐ.டி.யுவினர் புதிய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News