செங்கல்பட்டு வரசித்தி விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு

செங்கல்பட்டு வரசித்தி விநாயகர் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எளிமையான முறையில் வழிபாடு நடத்தப்பட்டது

Update: 2021-04-14 17:45 GMT

செங்கல்பட்டு மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு புத்தாண்டினை முன்னிட்டு வெள்ளி கவசம் அணிவித்து எளிமையான முறையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஒவ்வொறு வருடமும் ஆங்கில மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொரொனா ஊரடங்கு காலம் என்பதால் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோயிலில் அதிகாலை முதல் சாமிக்கு தினப்படி பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது .

அதனை தொடர்ந்து வெள்ளி கவசத்தில் சிறப்பு அருகம்புல் அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருளிய வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வரசித்தி விநாயகர் கோயில் நிர்வாகிகள் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டினை முன்னிட்டு ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

Tags:    

Similar News