செங்கல்பட்டு: வெள்ளநீரை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

வல்லம் ஊராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு.

Update: 2021-12-01 07:45 GMT

வல்லம் ஊராட்சிக்குட்பட்ட அம்மனம்பாக்கம், கொள்ளைமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மனம்பாக்கம், கொள்ளைமேடு பகுதியில் கடந்த 10 நாட்களாக தேங்கியுள்ள மழை நீர் காரமணமாக உடமைகளை இழந்து அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக வெள்ளநீர் வடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தபின் அப்பகுதிமக்கள் கூறுகையில்:- எங்கள் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வருகின்றோம். தற்போது பெய்த மழையினால் எங்கள் கிராம பகுதி மிகவும் பழுதடைந்து மழைநீர் ஊருக்குள் புகுந்து அனைத்து வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் எங்கள் கிராம பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தண்ணீர் நெடுநாள் தேங்கியுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளோம். மேலும் கடந்த ஒரு வார காலமாகவே எங்களின் அன்றாட தேவைகளான உணவு உடை இருப்பிடம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த மழையினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இதுவரை ஒரு நாள் மட்டுமே உணவு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்மணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அம்மணம்பாக்கம் மடுவின் உபரி நீரை திறக்ககூடாது என்று பிரச்சனை செய்து வருகின்றனர். மேற்படி உபரி நீர் திறப்பதால் எந்த கிராம பகுதிக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது. எனவே ஏரியின் மதகுகளை திறந்து எங்களது கிராம பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வழிவகை செய்யவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags:    

Similar News