வியாபாரிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை

கொரொனா விதிமுறைகளை மீறிய வியாபாரிகளுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-05-15 03:45 GMT

செங்கல்பட்டில் சாலையோர கடைகள் அனைத்தும் இன்று வழக்கம் போல திறந்து இருந்தன

கொரொனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.

சாலையோரத்தில் காய்கறி மற்றும் பல பூக்கடைகள் பழக்கடைகளை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது என ஏற்கனவே வியாபாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இன்று காலை செங்கல்பட்டு நகராட்சி பகுதிகளில் காய்கறி கடைகள்,பழக்கடைகள், பூக்கடைகள்,என சாலையோர கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறந்து இருந்தன.

இதனை பார்த்த செங்கல்பட்டு காவல் துறையினர் கொரொனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை எடுத்துச்சொல்லி அவர்களை அப்புறப்படுத்தினார்கள். இதுபோல தேநீர் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனை பயன்படுத்தி ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் தற்போது டீ, சிகிரெட், விற்பனை செய்து வருகின்றனர். அவர்களையும் காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஊரடங்கு விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News