செங்கல்பட்டில் ரூ.102-ஐ தொட்டது பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் கவலை

செங்கல்பட்டில், பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது; பெட்ரோல் விலை ரூ.102 ஐ நெருங்கியது.

Update: 2021-10-05 05:00 GMT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. அதன் பிறகு கொரோனா 2-ம் அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து, பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

செங்கல்பட்டில்,  நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ 101.75 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 95.67 ஆகவும் விற்பனையானது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 101.97 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்து ரூ 95.96 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்தனர்.

Tags:    

Similar News