சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் -செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்: செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு

Update: 2021-06-17 17:45 GMT

பாலியல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை டெல்லியிலிருந்து விமானத்தில் சிபிசிஐடி போலீசாரால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆஜர் படுத்திய பின்பு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீதான பாலியல் வழக்கு தொடர்பாக டெல்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே சென்னை சிபிசிஐடி போலீசார் டெல்லி போலீஸ் உதவியுடன் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி 2 நாள் ட்ரான்ஸ்ட் வாரண்ட் வழங்கி உத்தரவு பிறப்பித்தாா். அதனைத் தொடர்ந்து டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா சென்னை சிபிசிஐடி போலீசாரால் விமானத்தில் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டார்.

சென்னை கொண்டு வரப்பட்ட சிவசங்கர் பாபா விசாரணைக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர். மேலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். அதோடு கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று மாலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் சிவசங்கர் பாபாவிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி அவரை 15 நாட்கள் நீதிமன்றகாவகில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். விரைவில் அவரை விசாரணையில் எடுத்து விசரணை மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News