செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் - உலக விபத்து காய தினம் விழிப்புணர்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் - உலக விபத்து காய தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-10-22 04:30 GMT

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக விபத்து காய தினம் நிகழ்ச்சி.

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உடற்காயத்தால் உண்டாகும் மரணத்தை தவிர்க்க கையாளவேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு செங்கல்பட்டு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ராம்பிரசாத் தலைமையில், நடைபெற்ற விபத்துதடுப்பு விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் டாக்டர், முத்துக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், துணை காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஸ்பசேரோ ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

மேலும் இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் அனுபாமா மற்றும் பிற மருத்துவத்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மருத்துவக்கல்கூரி வளாகத்திலிருந்து இராட்டிணக்கிணறு வரை சென்ற இப்பேரணியில் செவிலியர் பயிற்சி மற்றும் பாராமெடிக்கல் மாணவ- மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கல்லூரி முதல்வர் தலைமையில் உடல் காய தடுப்பு மற்றும் மேலாண்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது. பேரணியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News